• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பாதாம் கேசரி

தேவையானப் பொருட்கள்:

ரவா - 1 கப்
பாதாம்பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1 கப்
ஏலக்காய்ப்பொடி - 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ - 4 அல்லது 5 இழை
பால் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பாதாம்பருப்பை 5 அல்லது 6 மணி நேரம் நீரில் ஊறவைத்து, தோலை நீக்கி, ஒரு டவலில் பரப்பி நிழலில் உலர விடவும். பின்னர் மிக்சியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். ( இதை முதல் நாளே செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். அல்லது பாதாம் பொடி கடைகளில் கிடைக்கும். அதையும் உபயோகிக்கலாம். ) பாதாம் பருப்பை பொடி செய்யுமுன், 5 அல்லது 6 பருப்புகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இது கேசரியை அலங்கரிப்பதற்கு உதவும்.

குங்குமப்பூவை பாலில் ஊறவிடவும்.

ஒரு வாணலியில் நெய்யை விட்டு சிறிது சூடாக்கவும். அதில் ரவாவைக் கொட்டி 2 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் அத்துடன் பாதாம் பொடியையும் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். அதில் 3 கப் கொதிக்க வைத்த நீரை (ரவாவை வறுக்கும் பொழுதே, இன்னொரு அடுப்பில் 3 கப் நீரைக் கொதிக்க வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்) ஊற்றி கைவிடாமல் கிளறவும். ரவை வெந்து கெட்டியானவுடன், சர்க்கரையைக் கொட்டிக் கிளறவும். அத்துடன் ஊற வைத்துள்ள குங்குமப்பூ பால், ஏலக்காய்ப்பொடி இவற்றைச் சேர்த்துக் கிளறி, ஒரு நெய் தடவியக் கிண்ணத்தில் கொட்டி, அதன் மேல் எடுத்து வைத்துள்ள பாதாம் பருப்பை மெல்லியதாக்ச் சீவித் தூவவும்.


குறிப்பு:

குங்குமப்பூ இல்லையென்றால், சிறிது கேசரி கலரைச் சேர்த்து செய்யவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...