• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பனை ஓலை கொழுக்கட்டை



தேவையானப்பொருட்கள்:

பனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 துண்டுகள் (ஆறு அங்குல நீளம்)
பச்சரிசி மாவு - 3 கப்
கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் - 2 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 கப்

செய்முறை:

கருப்பட்டியில் அரைக்கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.

பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள்,சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.

ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும்.


இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

சற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும்.


இந்தக் கொழுக்கட்டை, திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு பலகாரம்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

kaartikai kolukaatai paarttatum uur ninaivukal vantana


kumar


kumar1960@gmail.com

ஸாதிகா சொன்னது…

பனை ஓலை கொழுக்கட்டை வித்தியாசமாக உள்ளது.கருப்பட்டி,ஏலத்தூள் மணத்துடன் குருத்தோலை மணமணக்க சுவை கண்டிப்பாக அபாரமாக இருக்கும்.

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி சாதிகா. தாங்கள் கூறியுள்ளது போல், குருத்தோலை மணமும், கருப்பட்டியின் சுவையும் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...