• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

புடலங்காய் பொரியல்


தேவையானப்பொருட்கள்:

புடலங்காய் - 1
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 2 முதல் 3 வரை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

புடலங்காயை நீளவாக்கில் வெட்டி, அதன் உள்ளிருக்கும் விதை மற்றும் நூல் போஎற வெள்ளைப் பகுதியையும் நீக்கி விடவும். பின்னர் அதை அரைச்சதுர வடிவிலே மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். அத்துடன் சிறிது உப்புச் சேர்த்து பிசைந்து ஒரு தட்டில் போட்டு சற்று சாய்த்தால் போல் வைக்கவும். இதனால் காயிலுள்ள நீர் வடிந்து விடும்.

கடலைப் பருப்புடன் மஞ்சள் தூளைச் சேர்த்து வேக வைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் மிளகாயைக் கிள்ளிப் போட்டு கறிவேப்பிலையையும் சேர்க்கவும். அத்துடன் புடலங்காயை நன்றாகப் பிழிந்துப் போடவும். சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை மாறி காய் வெந்தவுடன் வேக வைத்துள்ள கடலைப் பருப்பையும் பிழிந்து சேர்க்கவும். அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து இரண்டொரு நிமிடம் கிளறி இறக்கி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...