• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

ஆப்பிள் அல்வா


தேவையானப்பொருட்கள்:

சிவப்பு ஆப்பிள் - 3
சர்க்கரை - ஒன்றரை கப்
நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது

செய்முறை:

ஆப்பிளை நன்கு கழுவி, துடைத்து, தோல் சீவி, நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

அடி கனமான ஒரு வாணலியில் (நான் ஸ்டிக்காக இருந்தால் நல்லது) ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு, அரைத்து வைத்துள்ள ஆப்பிள் பழ விழுதைப் போட்டு வதக்கவும். அடுப்பை நிதானமான தீயில் வைத்து, விழுதிலுள்ள நீர்ச்சத்து வற்றி, சற்று கெட்டியானவுடன் (10 முதல் 15 நிமிடங்கள் வரை பிடிக்கும்), அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அதில் கேசரி அல்லது ஆரஞ்சு வண்ணத்தைப் போட்டு, கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா சற்று இறுகி, வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.

இதை அப்படியே ஸ்பூனால் எடுத்தும் சாப்பிடலாம். அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி விட்டு, ஆறியதும் சதுரத் துண்டுகளாக வெட்டி எடுத்தும் கொடுக்கலாம்.

கவனிக்க: ஆப்பிளை அரைத்து, அல்வா செய்வதற்குப் பதில், ஆப்பிளைத் தோல் சீவி, காரட் துருவது போல் துருவி, மேற்கண்ட முறையிலும் செய்யலாம். துருவி செய்தால், பார்ப்பதற்கு இப்படி இருக்கும்.

21 கருத்துகள்:

asiya omar சொன்னது…

மிக அருமை.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

கமலா சொன்னது…

மிக்க நன்றி ஆசியா ஒமர் அவர்களே.

Vijiskitchen சொன்னது…

கமலா உங்க ரெசிப்பி ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எல்லாம் அருமை. நான் எப்பவும் உங்கள் தளத்திற்க்கு வந்து புது ரெசிப்பிகளை பார்ப்பேன்.
www.vijisvegkitchen.blogspot.com

அன்னு சொன்னது…

வாவ். நிறைய ரெசிபீஸ் எழுதியிருக்கீங்க. இனிமேதான் ஒவ்வொண்ணா செஞ்சு பாக்கணும். அழகான ஃபோட்டோக்கள், பாரம்பரிய உணவுகள், மிக அருமையான தொகுப்பு. கண்டிப்பா, எதையெல்லாம் செஞ்சு பாக்க முடியுதோ அதைப்பற்றி கமெண்ட்டும் போடுவேன். இன்னும் நிறைய எழுதவும். நன்றிங்.

அன்னு சொன்னது…

உங்களுடைய 'Categories / Tags' ரொம்ப கம்மியா இருக்கு. ஒவ்வொரு குறிப்பிலும் உபயோகப்படுத்துகிற முதன்மையான பொருளின் பேரையும் அதில் சேர்த்துக்கொண்டால் (ex: apple, toor dal, masoor dal...etc) இன்னும் நிறைய குறிப்பை நிறைய பேர் காணலாம், அதே போல் தெடுவதும் எளிதாகும். நன்றிங்.

கமலா சொன்னது…

தங்களின் அருமையான யோசனைக்கு மிக்க நன்றி அன்னு அவர்களே. விரைவில் அனைத்தையும் திருத்தி, முதன்மை பொருட்களின் சேர்த்து வெளியிடுகிறேன்.

கமலா சொன்னது…

மிக்க நன்றி Vijis kitchen.

தெய்வசுகந்தி சொன்னது…

சூப்பர் அல்வா!!!

கமலா சொன்னது…

மிக்க நன்றி தெய்வசுகந்தி அவர்களே.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

சூப்பர் அல்வா. இன்று குருவிற்கு படைப்பதற்கு ஒரு ஸ்வீட் ரெடி, நன்றிங்க......

கமலா சொன்னது…

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து அவர்களே. செய்து பார்த்து விட்டு தங்களின் கருத்தைத் தெரிவிக்கவும்.

lakshi சொன்னது…

Paarkavae naakil echil ooruthu, oru cup endral ethanai milliliter, konjam sollungalaen please..!

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி லஷ்மி அவர்களே. கப் என்பது, சாதரணமாக 200 மில்லி இருக்கும். நான் உபயோகிப்பது, எலெக்டிரிக் ரைஸ் குக்கருடன் வரும் கப். இது 160 முதல் 180 மில்லி வரை இருக்கும்.

udhaya சொன்னது…

Hi Mrs Kamala

your blog is very nice and that apple halwa is new recepie ....

udhaya சொன்னது…

This apple halwa is a new recepie... very nice ....

Kamala சொன்னது…

மிக்க நன்றி Udaya அவர்களே.

Radhika சொன்னது…

Arumaiyana Unavu muraigalai engaluku alitha tamilachiku mikka nandri

ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஆஹ்ஹா......ஆப்பிள் அல்வா சூப்பர்!ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

கமலா சொன்னது…

மிக்க நன்றி ஆர்.ராமமூர்த்தி அவர்களே.

பெயரில்லா சொன்னது…

Great information! I’ve been looking for something like this for a while now. Thanks!

கோமதி அரசு சொன்னது…

இன்று ஆப்பிள் அல்வா எங்கள் வீட்டில்.
நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...