• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

இனிப்பு துக்கடா


தேவையானப்பொருட்கள்:

மைதா - 1 கப்
ரவா - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
வெண்ணை அல்லது நெய் - 2 டீஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - 1/2 கப் அல்லது மாவு பிசைவதற்கு தேவையான அளவு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மைதா, ரவா, பொடித்த சர்க்கரை, வெண்ணை, சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்துக் கொள்ளவும். அதில் வெதுவெதுப்பான பாலை சிறிது சிறிதாக விட்டு மாவை மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும். குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக இடவும். கத்தியால் குறுக்கும், நெடுக்கும் கோடிட்டு, சிறு சதுர வில்லைகளாக வெட்டி எடுக்கவும். எல்லா மாவையில் இப்படியே செய்து, வில்லைகளை ஒரு பெரிய தட்டில் தனித்தனியாகப் போட்டு வைக்கவும்.

நான், கத்தியால் வெட்டுவதற்குப் பதிலாக, ஒரு சிறு பாட்டில் மூடியை வைத்து அழுத்தி சிறு வட்டங்களாக வெட்டிக் கொண்டேன்.

ஒரு வாணலியில் பொரிப்பதறகு தேவையான எண்ணையில் விட்டு சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், செய்து வைத்திருக்கும் "துக்கடாவை" கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். சர்க்கரை கொதித்து, ஒரு கம்பி பாகு பதத்திற்கு வநததும், ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கிளறி விட்டு, அடுப்பை அணைத்து விடவும். சர்க்கரை பாகில் பொரித்து வைத்துள்ள துக்கடாவைப் போட்டு, பாகு அதன் மேல் நன்றாகப் படும்படி கிளறி எடுத்து, ஒரு தட்டில் கொட்டி, தனித்தனியாகப் பரப்பி விடவும். சற்று நேரத்தில், சர்க்கரை பாகு பூத்து துக்கடாவின் மேல் படிந்து விடும். காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

கார துக்கடா குறிப்பிற்கு இங்கே சொடுக்கவும்.

2 கருத்துகள்:

ADHI VENKAT சொன்னது…

உங்களுடைய இனிப்பு துக்கடாவை எங்கள் குடியிருப்பில் நடந்த சமையல் போட்டியில் செய்து காட்டி இரண்டாம் பரிசை பெற்றுள்ளேன். நன்றி. இதை பற்றி என்னுடைய பதிவிலும் பகிர்ந்துள்ளேன்.

http://kovai2delhi.blogspot.in/2013/01/blog-post_29.html

கமலா சொன்னது…

. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தங்கள் பதிவைப் பார்த்தேன். எனது தளத்தை குறிப்பிட்டிருக்கும் தங்கள் பெருத்தன்மைக்கு மிக்க நன்றி.
அன்புடன்
கமலா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...