• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

தக்காளி உப்புமா


தேவையானப் பொருட்கள்:

ரவா - 1 கப்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 4 அல்லது 5
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

தக்காளி, வெங்காயம்,  இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணை விட்டு, ரவாவை லேசாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மீதி எண்ணையை விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், தக்காளியைப் போட்டு வதக்கவும். தக்காளி வதங்கி கூழ் போல் ஆனதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு  போட்டு அத்துடன் 3 கப் தண்ணீரைச் சேர்க்கவும்.   மூடி வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன், ரவாவைக் கொட்டி கைவிடாமல் கிளறவும். எல்லாம் சேர்ந்து கெட்டியானவுடன்,   இறக்கி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...