• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

அரிசி வடை


தேவையானப் பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
உளுத்த மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு

செய்முறை:

பயத்தம் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்த மாவைப்போட்டு, உப்பு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வேகவைத்த பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து, வென்னீர் விட்டு வடை மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு காயவைக்கவும். எண்ணை சூடானதும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, கைகளால் தட்டி நடுவில் துளையிட்டு எண்ணையில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: உளுத்த மாவு இல்லையென்றால், இட்லி மாவு ஒரு கரண்டி சேர்த்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...