• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கத்திரிக்காய் முந்திரி வறுவல்

தேவையானப் பொருட்கள்:

கத்திரிக்காய் - 5
வெங்காயம் - 1
முந்திரிப் பருப்பு - 10
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணை பொரிப்பதற்கு

செய்முறை:

கத்திரிக்காயை நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

எண்ணையைக் காய வைத்து, அதில் கத்திரிக்கயைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில், ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு, கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொட்டு, கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும். பின் தக்காளியைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக சுருள வதக்கவும். கடைசியில், வறுத்த கத்திரிக்காய், முந்திரி சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...