• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

தக்காளி தோசை


தேவையானப் பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
ரவா - 1  கப்
மைதா - 1 கப்
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

தக்காளியை பெரிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அரிசி மாவு, ரவா, மைதா, தக்காளி விழுது, மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை காயவைத்து, ஒரு பெரிய கரண்டி மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக பரப்பவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை தோசையை சுற்றி ஊற்றி நன்றாக வேகவிடவும். ஒரு பக்கம் வெந்தவுடன், திருப்பிப் போட்டு மறு பக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.

குறிப்பு:

சாதாரண தோசை மாவிலும் இதை செய்யலாம். ஒரு கப் மாவிற்கு ஒரு தக்காளியை அரைத்து, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள் சேர்த்து செய்யவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...