- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டின் பெயர் சர்வதாரி.
தமிழ் புத்தாண்டு அன்று, மிக முக்கியமாக சமையலில் எல்லா விதமான சுவைகளும் சேர்க்கப்படும். நம் வாழ்க்கையும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என்று அனைத்தும் கலந்த கலவைதான் என்பதை நமக்கு உணர்த்துவதுடன், அதை ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.
வெல்லம் (இனிப்பு), மாங்காய் (புளிப்பு), வேப்பம்பூ (கசப்பு), மிளகாய் (காரம்) சேர்த்து பச்சடி செய்வது வழக்கம்.
சிலர், மாங்காய் பச்சடியும், வேப்பம்பூ ரசமும் செய்வார்கள். அத்துடன், வடை, பாயசம், இனிப்பு போளி மற்றும் மாங்காய், முருங்கைக்காய், பலாக்கொட்டை மூன்றும் கலந்த சாம்பார் ஆகியவை புத்தாண்டு சமையலில் இடம் பெறும்.
சுவையாகச் சமைத்துப் படைத்து, பண்டிகையைக் கொண்டாடுங்கள்.
சமையற்குறிப்பு:மாங்காய் பச்சடி, மசால் வடை, பழப் பாயசம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக