
தேவையானப்பொருட்கள்:
பப்பாளிப் பழத்துண்டங்கள் - 1 கப் (நடுத்தர அளவு)
பால் - 1 சிறிய கப்
பால் பவுடர் அல்லது கிரீம் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
விருப்பமான எஸ்ஸென்ஸ் - சில துளிகள்
செய்முறை:
பப்பாளித்துண்டுகளையும், சர்க்கரையையும், மிக்ஸியில் போட்டு மசிய அரைக்கவும். பின்னர் அதில் பால் மற்றும் இதரப் பொருட்களைப்போட்டு ஒரிரு வினாடிகள் அரைத்து எடுக்கவும். குளிர வைத்து பரிமாறவும்.
குறிப்பு: இதில் சிறிது ஏலக்காய்ப் பொடியையும் சேர்க்கலாம். பால்பவுடருக்குப் பதிலாக, இதில் நான் MTR பாதாம் மிக்ஸ் சேர்த்து செய்துள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக