- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
கேழ்வரகு இனிப்பு இட்லி
தேவையானப்பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 கப்
பால் - 1 கப்
வெல்லம் தூள் செய்தது - 3/4 அல்லது 1 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
முந்திரிப்பருப்பு - 10
திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்ப்பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
வெல்லத்தை 1/4 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
கேழ்வரகு மாவு, தேங்காய்த்துருவல், பால், ஏலக்காய்ப்பொடி எல்லாவற்றையும், ஒரு பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டு, அதில் கரைத்து வைத்துள்ள வெல்லத்தையும் போட்டு கலககவும்..
முந்திரிப்பருப்பு, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து, மாவில் கொட்டவும்.
மாவை இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால், சிறிது பாலை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
இட்லித்தட்டில் நெய் தடவி, மாவை ஊற்றி, இட்லிப்பானையில் வைத்து பத்து நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.
இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது சிறிது வெண்ணைச் சேர்த்தும் பரிமாறலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக