• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

முட்டக்கோஸ் பொரியல்


தேவையானப்பொருட்கள்:

முட்டக்கோஸ் - 1 (சிறிய அளவு)
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1 (நடுத்தர அளவு)
பச்சைமிளகாய் - 3 அல்லது 4
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கோஸைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடலைப்பருப்புடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப்போட்டு சிறிது வதக்கவும். பின்னர் அத்துடன் கோஸைச் சேர்த்து கிளறி விட்டு, மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அவ்வப்பொழுது, கிளறி விட்டு, மூடி வேக வைத்தால், அதன் ஆவியிலேயே வெந்து விடும். வெந்தப்பின், அதில் வேக வைத்தக் கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

குறிப்பு: உப்பை கடைசியில் சேர்த்தால், கோஸ் சுருங்காமல் அப்படியே இருக்கும்.

விருப்பப்பட்டால், இத்துடன், ஒரு சிறு இஞ்சித்துண்டையும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கடலைப்பருப்பிற்குப் பதில், பயத்தம் பருப்பையும் உபயோகிக்கலாம். பருப்பைத் தவிர்த்து, வெறும் பொரியலும் செய்யலாம். அல்லது, காரட், பச்சைப்பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்தும் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...