• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சேப்பங்கிழங்கு வறுவல்


தேவையானப்பொருட்கள்:

சேப்பங்கிழங்கு - 8 முதல் 10 வரை
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

சேப்பங்கிழங்கை, குக்கரில் போட்டு, கிழங்கு மூழ்கும்வரை தண்ணீரைச் சேர்த்து, 3 அல்லது 4விசில் வரும் வரை வேக விடவும். ஆறியதும், தோலை உரித்து, நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, க்டுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் வேக வைத்த கிழங்கைப் போட்டு அத்துடன், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும். அடுப்பை, சிறு தீயில் வைத்து, அவ்வப்பொழுது கிளறி விட்டு, கிழங்கு சிவக்க வறுபடும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு: இத்துடன், ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, கடுகு தாளிக்கும் பொழுது சேர்த்து வதக்கியும் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...