- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
அகத்திக்கீரை துவட்டல்
தேவையானப்பொருட்கள்:
அகத்திக்கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் கீரையை அலசிப் போடவும். அத்துடன் உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் தனியாக சேர்க்க தேவையில்லை. கீரையிலுள்ள நீரே போதுமானது. அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கீரை வெந்தபின் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக