• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சுலப குணுக்கு


குணுக்கு, அரிசி, பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து அடை மாவு போல் தயாரித்து அதை எண்ணையில் சிறிது சிறிதாக ஊற்றி போண்டா போல் பொரித்தெடுக்கப்படும் ஒரு தின்பண்டம். இதை சுலபமாக செய்ய ஒரு வழி - மீந்து போகும் இட்லி மாவில் செய்வதுதான்.


தேவையானப்பொருட்கள்:

இட்லி மாவு - 1 பெரிய கிண்ணம் அளவு
மைதா அல்லது ரவா - 2 டேபிள்ஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இட்லி மாவுடன் மைதா அல்லது ரவாவைச் சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு சிட்டிகை சாதாரண் உப்பையும், சோடா உப்பையும் சேர்த்துக் கலக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு கடுகு தாளித்து அத்துடன் பெருங்காயத் தூளையும் சேர்த்து மாவில் கொட்டி நன்றாகக் கலக்கவும்.

எண்ணையை ஒரு வாணலியில் விட்டு சூடானதும், ஒரு சிறு குழி கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். வாணலி கொள்ளுமளவிற்கு 4 அல்லது 5 கரண்டி ஊற்றி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

எந்த விதமான சட்னியுடனும் பரிமாறலாம்.

1 கருத்து:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
சுட்டி இதோ!
http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_24.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...