• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

தேங்காய்பால் சாதம்


தேவையானப்பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்
பெரிய தேங்காய் - 1 அல்லது தேங்காய்பால் - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் ௪
பூண்டு பற்கள் - 15 முதல் 20 வரை
பட்டை - 2 துண்டுகள்
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
முந்திரிப்பருப்பு - 10
நெய் அல்லது எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை 1`/2 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் நீள வாக்கில் கீறிக் கொள்ளவும்.

தேங்காய் உபயோகித்தால், துருவி பால் பிழிந்துக் கொள்ளவும் அத்துடன் தேவையான நீரைச் சேர்த்து 4 கப் வருமளவிற்கு எடுத்துக் கொள்ளவும். தேங்காய் பால் உபயோகித்தால் அதில் 2 கப் தண்ணீரைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும். தேங்காய் பாலும், தண்ணீரும் சேர்ந்து மொத்தம் 4 கப் இருக்க வேண்டும்.

ஒரு பிரஷ்ஷர் குக்கரை அடுப்பிலேற்றி அதில் நெய் அல்லது எண்ணையை விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு சற்று வறுக்கவும். பின் அதில் பூண்டு, முந்திரிப்பருப்பு சேர்த்து சற்று வதக்கிய பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் மினுமினுப்பாக வதங்கியவுடன் அதில் அரிசியைச் சேர்த்து கிளறி விடவும். அரிசியைத் தொட்டால் சூடாக இருக்க வேண்டும். அது வரை அரிசி உடையாமல் பார்த்து மெதுவாக கிளறி விடவும். அரிசி சூடாகும் வரைக் கிளறி அதில் தேங்காய் பால் கலவையை விடவும். அத்துடன் எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து மூடி விடவும். 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

காரமான குருமா, தயிர் பச்சடி, சிப்ஸ் ஆகியவற்றுடன் பரிமாறவும்.

2 கருத்துகள்:

MJS சொன்னது…

பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறது. சுவையும் அதற்கேற்றார் போல இருக்கும் என்பது தெரிகிறது. நெய்ச்சோறு எப்படி செய்வது என்பது பற்றி எழுதவும்.

பெயரில்லா சொன்னது…

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தேங்காய் பால் சாதம் சாப்பிட சுவையாக இருக்கும். நெய் சோறு குறிப்பு விரைவில் எழுதுகிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...