• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

எலுமிச்சம்பழ சாதம்


தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
எலுமிச்சம் பழம் - 2
சிவப்பு அல்லது பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி, குழைய விடாமல் சாதமாக வேக வைத்தெடுக்கவும். ஒரு தட்டிலோ அல்லது வாயகன்ற பாத்திரத்திலோக் கொட்டி பரப்பி விடவும். அதன் மேல் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் எண்ணையை தெளிக்கவும்.

எலுமிச்சம் பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்தெடுத்துக் கொள்ளவும். அதில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுக்கவும். பின் அத்துடன் முந்திரிப்பருப்பு, மிளகாய் (ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும்), பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சற்று வதக்கி, எலுமிச்சை சாற்றில் கொட்டவும். இத்துடன் ஆற வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து கவனமாகக் கிளறவும்.

குறிப்பு: நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதானால், தாளிப்பிலேயே மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதிலேயே சாதத்தையும் கொட்டி சிறு தீயில் வைத்து, ஓரிரு நிமிடங்கள் கிளறி விட்டு, கீழெ இறக்கி வைக்குமுன், எலுமிச்சைச் சாற்றை சேர்த்து கிளறி, இறக்கி வைக்கவும்.

கொத்துமல்லித்தழை மற்றும் சிறிதாக நறுக்கிய காரட் துண்டுகளைத் தூவி அலங்கரிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...