- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
அரிசி பருப்பு வடை
தேவையானப்பொருட்கள்:
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 5 முதல் 6 வரை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும் பருப்பையும், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைக்கும் பொழுது தேவைப் பட்டால் ஒரு கை நீரைத் தெளித்து அரைக்கலாம். அதிகமாக தண்ணீரை விடக்கூடாது.
அரைத்த மாவில், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டு, நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி , சூடானதும், எலுமிச்சம் பழ அளவு மாவை அடுத்து வடை போல் தட்டி, எண்ணையில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
மேற்கூறிய அளவிற்கு சுமார் 10 வடைகள் கிடைக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக