• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

வாழைத்தண்டு கூட்டு


தேவையானப்பொருட்கள்:

வாழைத்தண்டு - 1 (ஒரு அடி நீளம்)
பயத்தம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

வாழைத்தண்டை வட்ட வில்லைகளாக வெட்டி, அதிலுள்ள நாரை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய துண்டுகளை சிறிது மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

பயத்தம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைத்தெடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில், வாழைத்தண்டு துண்டுகளைப் போட்டு, அதில் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு போட்டு அத்துடன், வாழைத்தண்டு மூழ்கும் அளவிற்கு தேவையான நீரைச் சேர்த்து வேக விடவும். வாழைத்தண்டு நன்றாக வெந்ததும் அத்துடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இதற்கிடையில், தேங்காய்த்துருவல், சீரகம், அரிசி ஆகியவற்றை மைய அரைத்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்துக் கிளறி விடவும்.

கூட்டு மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, கடுகு, மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.

சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். அல்லது காரகுழம்பு மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஹாய் கமலா,

இதே போல் தான் நானும் அடிக்கடி செய்வேன்.ஆனால் பருப்பை வேக விடும் பொழுது பச்சை மிளகாய்,பெருங்காயம் சேர்த்து செய்வேன்.படம் தெளிவாக உள்ளது.சத்தான குறிப்பு கொடுத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அம்மு.
http;//ammus-recipes.blogspot.com

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி அம்மு அவர்களே. பருப்பில் பச்சை மிளகாய் சேர்த்து வேகவைப்பது மிகவும் சுவையாகவே இருக்கும். தகவலுக்கு மீண்டும் ஒரு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...