• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பீட்ரூட் அல்வா


தேவையானப்பொருட்கள்:

பீட்ரூட் - 1
பால் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் தூள் - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)
முந்திரிப்பருப்பு - 10

செய்முறை:

பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு, பொடியாகத் துருவிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் இன்னுமொரு டீஸ்பூன் நெய் விட்டு, அத்துடன் பீட்ரூட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும். பீட்ரூட் ஈரப்பசையில்லாமல் நன்கு வதங்கியவுடன் பாலைச் சேர்த்துக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து பால் சுண்டி பீட்ரூட் கலவையுடன் நன்றாகச் சேர்ந்தப் பின் சர்க்கரையைச் சேர்க்கவும். கை விடாமல் அல்வா கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா கெட்டியானவுடன் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறவும். கடைசியில் ஏலக்காய், ஜாதிக்காய் தூள்களையும், வறுத்த முந்திரியையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி, நெய் தடவிய கிண்ணத்தில் போட்டு வைக்கவும்.

2 கருத்துகள்:

puduvaisiva சொன்னது…

பார்க்கும் போதே இங்க நாக்குல உமிழ்நீர் சுரக்குது.

:-)))))

இந்த வாரம் செய்திட வேண்டியதுதான்.

நன்றி சகோதரி

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி புதுவை சிவா அவர்களே. செய்து பார்த்து தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...