• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

வாழைக்காய் புளி வறுவல்



தேவையானப்பொருட்கள்:

வாழைக்காய்: 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
புளி - ஒரு நெல்லிக்காயளவு அல்லது புளி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாழைக்காயின் தோலை சீவி விட்டு 1/4" அளவிற்கு வட்டமாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

புளியை சிறிது நீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து எடுக்கவும். புளி பேஸ்ட் என்றால் அப்படியே உபயோகிக்கலாம்.

வாழைக்காய் துண்டுகளை நன்றாக அலசி விட்டு, தண்ணீரிலிருந்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, புளிக்கரைசல் அல்லது புளி பேஸ்ட் சேர்த்து பிசறவும். தேவைப்பட்டால் ஒரு கை நீர் தெளித்து பிசறி 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

ஒரு வாயகன்ற ஏந்தலான வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், அதில் பிசறி வைத்துள்ள வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு கிளறி விடவும். வாழைக்காய் துண்டுகளை தனித்தனியாக எடுத்து விட்டு, மிதமான தீயில் ஒரு மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும். அவ்வப்பொழுது மூடியைத் திறந்து மெதுவாக காயைத் திருப்பி விடவும். காய் நன்றாக வேகும் வரை மிதமான் தீயில் மூடி வைக்கவும். காய் வெந்தவுடன், மூடியை எடுத்து விட்டு, சிறு தீயில் நன்றாக சிவக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...