• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

தயிர் ஓட்ஸ்


இது தயிர் சாதம் செய்வது போன்றதுதான். சாதத்திற்குப் பதில் ஓட்ஸை சேர்க்க வேண்டும்.

தேவையானப்பொருட்கள்:

குயிக் குக்கிங் ஓட்ஸ் - 1 கப்
பால் - 3 கப்
தயிர் - 1 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பாலை கொதிக்க வைத்து, அதில் ஓட்ஸை சேர்த்து, அடிக்கடி கிளறி விட்டு, 3 அல்லது 4 நிமிடங்கள் வரை வேக விடவும். (மைக்ரோவேவ் அவனிலும் வேக வைத்து எடுக்கலாம்).

வெந்த ஓட்ஸை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து சற்று ஆற விடவும். ஓட்ஸ் ஆறியவுடன், தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் சேர்க்கவும். உப்பையும் சேர்த்துக் கிளறி, கடுகு, இஞ்சி, மிளகாய் ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டி, மீண்டும் நன்றாகக் கலக்கவும்.

துருவிய கேரட், பச்சைக் கொத்துமல்லி, பச்சை திராட்சை/மாதுளம் பழ முத்துக்கள் ஆகியவற்றைத் தூவி பரிமாறவும்.

வறுத்த மோர்மிளகாயுடனும் சேர்த்து சாப்பிட சுவையாயிருக்கும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

your site is very nice.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...