- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
கொத்துமல்லி சாதம்
தேவையானப்பொருட்கள்:
அரிசி - 1 கப்
பச்சை கொத்துமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
அரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக்கவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். இஞ்சியையும் துண்டுகளாக நறுக்கிப் போட்டு வதக்கவும். பின் அதில் புளியைப் போட்டு சற்று வதக்கவும். கடைசியில் கொத்துமல்லியை நறுக்கிப்போட்டு சில வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
வாணலியில் மீதி எண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், முந்திரிப்பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். அத்துடன் சாதம், உப்பு, கொத்துமல்லி விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
கொத்தமல்லி சாதம் செய்முறை சுலபமாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி.
நான் வேறு முறையில் செய்வேன்.
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். ஆனால் உங்கள் தளத்தை தினமும் பார்ப்பது என் துணைவி தான். அதனால், 'வெயிட்' போடுவது என்னமோ நான் தான். (சும்மா நகைச்சுவைக்காக) நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். தங்களின் பகிர்வுக்கு நன்றி. தங்களின் பல பகிர்வுக்கு எனது வாழ்த்துக்கள்...நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
kothamali sadham miga nandraga irundhadhu.... idhu matum illamal naan ungal thalathil ula kathirikai sadham,thakali sadham (1st type) oru sila poriyal galai'um seidhu parthen... suvai'aga irundha'dhu...
VIN'NAPAM:vaalai thandu,vaalai poo vaithu suvai'ga samaika ungal karuthukalai kurungal
கருத்துரையிடுக