• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பொன்னாங்கண்ணி கீரை பொரியல்


இந்தப் பொரியலை வேறு வகை கீரையிலும் செய்யலாம். ஆனால் பொன்னாங்கண்ணி மற்றும் முருங்கைக் கீரையில் செய்தால் நன்றாக இருக்கும்.

மேலும் பொன்னாங்கண்ணி கீரை கண் பார்வைக்கும், சரும பொலிவிற்கும் உகந்தது. ஊளைச் சதையைக் குறைக்க உதவும். மூல வியாதியைக் குணப்படுத்த வல்லது.

தேவையானப்பொருட்கள்:

பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கட்டு
பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கீரையை ஆய்ந்து, கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம் பருப்புடன் தேவையான தண்ணீரைச் சேர்த்து, மஞ்சள் தூளையும் சேர்த்து, வேக விடவும். முக்கால் வேக்காடு வந்ததும் எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின் அதில் மிளகாயை ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போட்டு சற்று வறுக்கவும். பின்னர் அதில் கீரையைப் போட்டுக் கிளறி விடவும். மூடி போட்டு, சிறு தீயில் வைத்து வேக விடவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. கீரையிலுள்ள நீரிலேயே வெந்து விடும். ஓரிரு வினாடிகள் வெந்தாலே போதும். மூடியைத் திறந்து, உப்பு போட்டுக் கிளறி மீண்டும் சில வினாடிகள் வதக்கவும். நீர் சுண்டியதும், வேக வைத்துள்ள பருப்பு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றைச் சேர்த்து, மீண்டும் சில வினாடிகள் வதக்கி, இறக்கி வைக்கவும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...