- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
கீரை அடை
தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பச்சை பயறு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கீரை (எந்த வகை கீரையானாலும்) நறுக்கியது - 1 பெரிய கிண்ணம்
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
எண்ணை - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, பருப்பு அனைத்தையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, கழுவி அத்துடன் உப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வடை மாவை விட சற்று தளர இருந்தால் போதும். அதில் கீரை, தேங்காய் பற்கள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பிலேற்றி,எண்ணை தடவி அதில் ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து வைத்து அடையாக தட்டவும். சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு வேக விடவும். ஒரு பக்கம் சற்று சிவந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கமும் சிவக்க சுட்டெடுக்கவும்.
வெண்ணை/வெல்லம் அல்லது சட்னி சேர்த்து பரிமாறலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
tasty...
picturebite.com
பல நாட்கள் கழித்து உங்கள் ருசியான பதிவுகளை பார்க்க கிடைத்தது.
வணக்கம்.
கருத்துரையிடுக