• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சோள ரவா இட்லி

ரவா போன்று கொரகொரப்பாக அரைக்கப்பட்ட சோளம், "கார்ன் மீல்" என்ற பெயரில் கடைகளில் கிடைக்கிறது.  சத்துக்கள் நிறைந்த இந்த சோள ரவாவை வைத்து, "இட்லி",  "உப்புமா".  "அடை",  "பாயசம்" என்று  விதவிதமாக சமைக்கலாம். 

இட்லி தயாரிக்க:

தேவையானப்பொருட்கள்:

சோள ரவா - 2 கப்
தயிர் - 2 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
"ஈனோ" ஃபுரூட் சால்ட் - 3/4 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு, சீரகம் - கொரகொரப்பாக பொடித்தது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரி பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
காரட் துருவல் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை (விருப்பப்பட்டால்)

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகப் பொடி, பச்சை மிளகாய், இஞ்சி (பொடியாக நறுக்கியது) சேர்த்து பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் சோள ரவையைக் கொட்டிக் கிளறி விட்டு, சற்று வாசனை வரும் வரை வறுக்கவும். (நீண்ட நேரம் வறுக்க தேவையில்லை).

வறுத்த சோள  ரவாக் கலவையை கீழே இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன் அதில் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் தயிரை நன்றாகக் கடைந்து சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின்னர் அதில் ஃபுரூட் சால்ட்டைப் போட்டு, அதன் மேல் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரை ஊற்றவும். ஃபூருட் சால்ட் பொங்கி நுரைத்து வரும். மாவுடன் நன்றாகக் கலந்துக் கொள்ளவும். தேவைப்பட்டால், சிறிது நீரையும் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

இட்லி பானையில் தண்ணீரைக் கொதிக்க விட்டு, அதன் பின், இட்லி தட்டில் எண்ணை தடவி அதில் சிறிது கேரட் துருவலைப் போட்டு, அதன் மேல்  மாவை ஊற்றி, இட்லி பானையில் வைத்து 12 முதல் 15 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.

மேற்கண்ட அளவிற்கு, 10 முதல் 12 இட்லி வரை கிடைக்கும்.

7 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

சோள ராவா இட்லி ரொம்ப நன்றாக இருக்கிறது.
செய்முறைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல சத்துள்ள சமையல் ! நன்றி சகோ !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல சத்துள்ள சமையல் ! நன்றி சகோ !

Narmi சொன்னது…

Interesting, usually I do kesari with it. Thank you for the recipe, must try out

Narmi சொன்னது…

Interesting. Must try it. Usually I make kesari with it. Thank you for the recipe.

Gurgaonflowerplaza சொன்னது…

Yummy!!!!
Gurgaonflowerplaza.com

பால கணேஷ் சொன்னது…

உங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். சமயமிருப்பின் பார்த்து கருத்துக் கூறவும். ந்ன்றி.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_03.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...