• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சத்து மாவு பர்பி


தேவையானப்பொருட்கள்:

சத்து மாவு - 2 கப்
பால் பவுடர் - 1 கப்
சர்க்கரை - 1 - 1/2 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஓரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, அதில் சத்து மாவைப் போட்டு மிதமான தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வரை வறுத்தெடுத்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். அத்துடன் பால் பவுடரைச் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
 
வாணலியில் சர்க்கரையைப்போட்டு அத்துடன் அரைக்கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.  சர்க்கரைக் கொதித்து மேலே குமிழ் வரத்தொடங்கியதும், அடுப்பை தணித்து சிறு தீயில் வைத்து, மாவைக் கொட்டிக் கிளறவும்.  மாவு கெட்டியாக ஆரம்பித்ததும் மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சற்று ஆறியதும் வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.
 
குறிப்பு:  நான் "மன்னா சத்து மாவு" உபயோகித்து இதை செய்தேன்.  அதிலேயே ஏலக்காய் சேர்த்திருப்பதால், நான் தனியாக வாசனை எதுவும் சேர்க்கவில்லை.  விருப்பப்பட்டால் மேலும் சிறிது ஏலக்காய் தூள் அல்லது வெனிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கலாம்.  முந்திரி, பிஸ்தா போன்றவற்றையும்  சேர்க்கலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...