• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பட்டர் முறுக்கு


தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
கடலை மாவு - 1/2 கப்
பொட்டுகடலை மாவு - 1/4 கப்
வெண்ணை - 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

பொட்டுகடலை மாவிற்கு - 1/4 கப்பிற்கு சற்று கூடுதலாக பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து சலித்து தேவையான மாவை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரிசி மாவு மற்றும் கடலை மாவையும் சலித்து எடுத்து, அத்துடன் பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அத்துடன் வெண்ணை, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாகக் கலந்து, தேவையான அளவு தண்ணீரை விட்டு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும்.  முறுக்கு அச்சில் ஒற்றை கண் நட்சத்திர வடிவிலான வில்லையைப் போட்டு, மாவை அதில் போட்டு எண்ணையில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து விடவும்.  முறுக்கை திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதுவரை (பட்டர்) முறுக்கு செய்ததில்லை...

மிக்க நன்றி சகோதரி...

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

அம்மா கூட சின்ன வயசுல செய்வோம்



நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...