தேவையானப்பொருட்கள்:
எள் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு, நன்றாக வெடித்து பொரியும் வரை வறுத்து எடுத்து ஆற விடவும். ஆறியபின் மிக்ஸியில் போட்டு 2 அல்லது 3 சுற்றுகள் வரை அரைக்கவும். அத்துடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து மீண்டும் சில வினாடிகள் ஓட விடவும். கடைசியில் ஏலக்காய்த்தூளையும் சேர்த்து 1 அல்லது 2 சுற்றுகள் சுற்றி எடுக்கவும். சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு உருண்டைகளாக பிடிக்கவும்.
2 கருத்துகள்:
குறித்துக் கொண்டார்கள்...மிக்க நன்றி சகோதரி...
அம்மா செய்து கொடுத்துள்ளார்கள். நன்றாக இருக்கும். அதே பக்குவத்தில் சொல்லியுள்ளீர்கள். நன்றி
கருத்துரையிடுக