• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கோவைக்காய் கறி


தேவையானப்பொருட்கள்:

கோவைக்காய் - 10
எண்ணை - 3 முதல் 4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
வெங்காயம் - 1
உப்பு - 1 ஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கோவைக்காயைக் கழுவி விட்டு, நீளவாக்கில் நான்காகக் கீறிக்கொள்ளவும். முழுவதுமாகக் கீறாமல் முக்கால் பாகம் கீறி விட்டு ஒரு முனையை அப்படியே வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு கடுகு போடவும்.  கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் வெந்தயம், மிளகாய், சீரகம் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுக்கவும்.  பின் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, இறக்கி வைத்து ஆறவிடவும்.  சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.  தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

அரைத்தெடுத்த விழுதை ஒவ்வொரு கோவைக்காயிலும் கொள்ளுமளவிற்கு அடைக்கவும்.  ஒரு தவாவை அடுப்பிலேற்றி மீதமுள்ள எண்ணையை விட்டு அதில் மசாலா அடைத்து வைத்துள்ள கோவைக்காயை தனித்தனியாக பரப்பி வைக்கவும்.


மூடி போட்டு மிதமான தீயில் சில நிமிடங்கள் வேக விடவும்.  மூடியைத் திறந்து காயை திருப்பி விட்டு, ஒரு கை தண்ணீரைத் தெளித்து, மீண்டும் மூடி வைத்து வேக விடவும்.  அவ்வப்பொழுது திருப்பி விட்டு காய் நன்றாக வெந்ததும், மூடியில்லாமல் சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து  வதக்கி எடுக்கவும்.


சாதம், சப்பாத்தி இரண்டிற்குமே தொட்டுக் கொள்ளலாம்.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

செய்ய சொல்லுவோம்... ஆனால் கோவைக்காய் தான் அதிகம் கிடைப்பதில்லை...

நன்றி...

அருணா செல்வம் சொன்னது…

கோவைக்காவை நான் பாத்ததே இல்லை....!!
முதல் முறையாக காயையும் அதைச் சமயல் செய்யும் பக்ககுவத்தையும் அறிந்தேன். நன்றி.

mathuran சொன்னது…

இதைக் கோவைக்காய் எனக் குறிப்பிடுவதில்லை. கொவ்வைக்காய் என்பதே ஆனால் ஏதோ கோவைக்காய் என குறிப்பிடப் பழகி விடுகிறார்களே இல்லை.
"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்த உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவரே இந்த மாநிலத்தே! - அப்பர் தேவாரம்

தமிழ் காமெடி உலகம் சொன்னது…

கண்டிப்பா செய்து பார்த்து விட்டு என் கருத்தை எழுதுகிறேன்..உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...