• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

மகிழம்பூ முறுக்கு


தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
பயத்தம் மாவு - 1/2 கப்
பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
நெய் அல்லது வெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1/4 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

1/2 கப் அல்லது 3/4 கப் பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து, சலித்து 1/2 கப் அளவிற்கு மாவை எடுத்துக் கொள்ளவும்.

சர்க்கரையையும் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பயத்தம் மாவு, பொடித்த சர்க்கரை, உப்பு, நெய் அல்லது வெண்ணை ஆகியவற்றைப் போட்டு கலந்துக் கொள்ளவும்.  பின்னர் தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கலக்கவும்.  கடைசியில் சிறிது சிறிதாகத் தண்ணீரைத் தெளித்து மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். முறுக்கு அச்சில் ஒற்றை கண் நட்சத்திர வடிவிலான வில்லையைப் போட்டு, மாவை அதில் போட்டு எண்ணையில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து விடவும். முறுக்கை திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.


2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த தீபாவளிக்கு செய்திடுவோம்...

குறிப்பிற்கு நன்றி...

Tamil Online சொன்னது…

நல்ல ஒரு சமையல் குறிப்பு.
தீபாவளி சமயத்தில் தந்தமைக்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...