தேவையானப்பொருட்கள்:
பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற குடமிளகாய்
(நடுத்தர அளவு) - ஒவ்வொன்றும் - 1
பூண்டுப்பற்கள் - 5 அல்லது 6 (சிறிய அளவு)
பச்சை கொத்துமல்லி இலை - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
குடமிளகாயைக் கழுவி, காம்பை நீக்கி விட்டு அரை அங்குல நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டைப் பொடியாக நறுக்கவும்.
ஒரு அகலமான் நான் ஸ்டிக் கடாயில் எண்ணை விட்டு சூடானதும் பூண்டைப் போட்டு சில வினாடிகள் வதக்கவும். பின்னர் அதில் குடமிளகாய்த்துண்டுகளைப் போட்டு மேலும் சில வினாடிகள் வதக்கவும். அதன் மேல் கொத்துமல்லி, புதினாவை நறுக்கித் தூவி கிளறி விடவும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, ஓரிரு கை நீரையும் தெளித்துக் கிளறி, நிதானமான தீயில் மூடி வைத்து வேக விடவும். சில வினாடிகள் கழித்து, மூடியைத் திறந்து விட்டு, தண்ணீர் வற்றும் வரை வதக்கி எடுக்கவும்.
சீரக சாதம், புலாவ் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். சப்பாத்தியின் உள்ளே வைத்து சுருட்டியும் சாப்பிடலாம். லன்ச் பாக்ஸ்ஸிற்கு ஏற்றது.
1 கருத்து:
நல்ல சுவையான குறிப்பு.
நன்றி.
கருத்துரையிடுக