- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
வேர்க்கடலை பொடி
தேவையானப்பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கப்
வெள்ளை எள் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 6 முதல் 7 வரை
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
உப்பு - 3/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
ஒரு வெறும் வாணலியில், வேர்க்கடலையைப் போட்டு, தொட்டால் சுடும் அளவிற்கு வறுத்தெடுக்கவும். பின்னர் எள்ளைப் போட்டு பொரியும் வரை வறுத்தெடுக்கவும். கடைசியில் பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றைப் போட்டு ஓரிரு வினாடிகள் வறுத்தெடுத்து ஆற விடவும்.
பின்னர் வறுத்த அனைத்தையும், மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
இந்தப் பொடியை, சூடான சாதத்தில் போட்டுக் கலந்து, வேர்க்கடலை சாதமாக சாப்பிடலாம். இட்லி/தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக