• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பறங்கிக்காய் பொரியல்


தேவையானப் பொருட்கள்:

பறங்கிக்காய் - 1 பெரிய துண்டு
காய்ந்த மிளகாய் - 3
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணை - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

பறங்கிக்காயை தோல் சீவி, விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, பெருங்காய்த் தூள் சேர்த்து, உளுத்தம் பருப்பு சிவந்தவுடன், மிளகாயைக் கிள்ளிப் போடவும். பின் கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும். கடைசியில், பறங்கிக்காய் துண்டுகளை சேர்க்கவும். உப்பு போட்டு, ஒரு கையள்வு தண்ணீரைத் தெளித்து மூடி வைத்து, சிறு தீயில் வேக விடவும். காய் வெந்ததும், தேங்காய் துருவலைச் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...