• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

இஞ்சித் தொக்கு



தேவையானப் பொருட்கள்:

இஞ்சி - நான்கு அல்லது ஐந்து பெரிய துண்டுகள்
காய்ந்த மிளகாய் - 8 அல்லது 10
கடுகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சம் பழ அளவு
வெல்லம் - எலுமிச்சம் பழ அளவு
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
நல்லெண்ணை - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

இஞ்சியை நன்கு கழுவித் துடைத்து, தோலை சீவவும். சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை சிறிது வென்னீரில் ஊற வைக்கவும்.

வெறும் வாணலியில் வெந்தயத்தைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, பொடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, எண்ணை காய்ந்தவுடன் இஞ்சி துண்டுகளை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் அதே எண்ணையில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்தவுடன், மிளகாயைப் போட்டு ஓரிரு வினாடிகள் வறுத்து, அடுப்பை அணைத்து விடவும்.

முதலில் வதக்கிய இஞ்சி, புளி (ஊறிய நீரையும் சேர்க்கவும்), வெல்லம், உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் தாளித்த கடுகு, மிளகாயை அதிலுள்ள எண்ணையுடன் சேர்த்து, வெந்தயப்பொடியையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

கவனிக்க: வெல்லம் தேவையில்லை என்றால், அதை தவிர்த்து விடவும். வெல்லம் சேர்க்காவிட்டால், மிளகாயைக் குறைத்துக் கொள்ளவும். தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். சீரணத்திற்கு மிகவும் உதவும்.

11 கருத்துகள்:

Pavithra Srihari சொன்னது…

paarkavae superaa irukkunga kamalaa

கமலா சொன்னது…

சாப்பிடவும் சுவையாக இருக்கும். வருகைக்கு மிக்க நன்றி.

எல் கே சொன்னது…

//வெறும் வாணலியில் /
ithula oil serka koodatho???
nalla iruku let me try

கமலா சொன்னது…

எண்ணை சேர்க்காமல் வறுத்தால்தான் பொடிப்பதற்கு சுலபமாக இருக்கும். வெந்தய அளவு குறைவாக இருப்பதால், பொடிப்பதற்கு, சிறு உரலைப் பயன்படுத்தி இடித்துக் கொள்ளலாம்.

எல் கே சொன்னது…

chennaila uraluku nan enga poven.. i have to use mixi or any stone :)

கமலா சொன்னது…

சென்னையிலே சிறு உரலும், உலக்கையும் (mortar and pestle) எல்லாப் பாத்திரக்கடைகளிலும், விதவிதமாகக் கிடைக்கிறது. ஏலக்காய், மிளகு போன்றவற்றை அவ்வப்பொழுது பொடிக்க மிகவும் உபயோகமாயிருக்கும். ரசத்திற்கு மிளகு, சீரகம் பொடிக்கவும் வசதியாக இருக்கும். இஞ்சி, பூண்டு போன்றவற்றை நசுக்கிப் போடவும் உபயோகிக்கலாம்.

karthik சொன்னது…

nice cooks

Geetha Babu சொன்னது…

thanks kamala madam. will try out and let u know 4 sure.

மீனாமுத்து சொன்னது…

கமலா அத்தனையும் அருமை! ஆளைக்கட்டிப்போட்டுவிட்டீர்கள் இதை
(கோலப்பக்கத்தையும்) விட்டு போக மனமேயில்லை!

நீங்க எங்கே இருக்கீங்க? பார்க்கணுமே :)

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி மீனாமுத்து அவர்களே. சீர்மிகு சென்னையில்தான் இருக்கிறேன்.

A.Ramakrishnan சொன்னது…

Very nice I will try

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...