• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

நெல்லிக்காய் சாதம்


தேவையானப்பொருட்கள்:

சாதம் - 2 கப்
நெல்லிக்காய் - 2 முதல் 3 வரை
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

நெல்லிக்காயை துருவிக் கொள்ளவும். அல்லது துண்டுகளாக நறுக்கி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டி சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்ததும், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, துருவிய அல்லது அரைத்த நெல்லிக்காயைப் போட்டு மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பின்னர் அதில் உப்பு, சாதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கும் முன் எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

காய்கறி கூட்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

காரம் தேவையென்றால், பச்சை மிளகாயை நெல்லிக்காயுடன் அரைத்து சேர்க்கவும். எப்படி சாப்பிட்டாலும் விட்டமின் சி மிகுந்த அருமையான சாதம் இது.

2 கருத்துகள்:

மாங்கனி நகர செல்லக் குழந்தை சொன்னது…

அருமையாக உள்ளது.....சாப்பிட்டு பார்த்த எப்படி இருக்கும்னு தெரியல....

கமலா சொன்னது…

சாப்பிடவும் சுவையாகவே இருக்கும். மேலும் சுவை கூட்ட முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...