• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பூண்டு ஊறுகாய்


தேவையானப்பொருட்கள்:

பூண்டு பற்கள் - 1 கப்
புளி - ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வெல்லம் - ஒரு சிறு துண்டு

வறுத்தரைக்க:

தனியா - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

4 அல்லது 5 முழு பூண்டை எடுத்து, பூண்டு பற்களைத் தனியாக எடுத்து தோலுரித்துக் கொள்ளவும். இதற்கு நாட்டு பூண்டு எனப்படும் சிறிய அளவு பூண்டு பற்கள் தேவை. பெரிய அளவு பற்களாய் இருந்தால், நீள வாக்கில் 2 அல்லது 4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 1 கப் பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து ஒரு கப் அளவிற்கு கெட்டியாக புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும்.

வெறும் வாணலியில், தனியா, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுத்து, ஆற விட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் அதில் உரித்த பூண்டு பற்களைப் போட்டு சிவக்க வதக்கவும். பூண்டு நன்றாக வதங்கிய பின் புளித்தண்ணீரை விடவும். அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். புளி பச்சை வாசனை போக கொதித்தவுடன், அதில் அரைத்து வைத்துள்ளப் பொடியைத் தூவி கிளறி விடவும். தொக்கு போல் எல்லாம் சேர்ந்து வரும் பொழுது இறக்கி வைக்கவும்.

ஆறிய பின் ஒரு பாட்டில் அல்லது ஜாடியில் போட்டு வைக்கவும்.


தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஐயோ... ...ஸ்ஸ்...

நன்றி...

கவியாழி சொன்னது…

ருசியாக இருக்குமென நினைக்கிறன்

கமலா சொன்னது…

திண்டுக்கல் தனபாலன், கவியாழி கண்ணதாசன் - வருகைக்கு மிக்க நன்றி. இந்த ஊறுகாய் சுவையாகவே இருக்கும். பூண்டு சாப்பிட இதுவும் ஒரு வழி.

அருணா செல்வம் சொன்னது…

நானும் செய்து பார்க்கிறேன் தோழி.
ஊறுகாயைப் பார்க்கும் பொழுதே நாவில் எச்சில் ஊறுகிறதே...
அனேக மாக நன்றாக இருக்கும் தான் என்று நினைக்கிறேன்.

ADHI VENKAT சொன்னது…

எங்கம்மா பூண்டு ஊறுகாய் போடுவாங்க. இது படத்தை பார்க்கும் போது நாவில் நீர் சுரக்க வைக்கிறது. செய்து பார்க்கிறேன்.

சுபத்ரா சொன்னது…

வாவ். சூப்பர்.

வெல்லத்தை என்ன பண்றது? வெல்லம் இல்லாமல் செஞ்சா நல்லா இருக்குமா? Pls reply bcos I'm going to try it :)

கமலா சொன்னது…

வெல்லம் சேர்க்காமலும் செய்யலாம். வெல்லம் சேர்த்தால் சுவை சற்று கூடும்.

girija chennai சொன்னது…

thank you madam realy super

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...