• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

காலிஃபிளவர் வறுவல்


தேவையானப் பொருட்கள்:

காலிஃபிளவர் - 1
இஞ்சிப்பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு

செய்முறை:

காலிஃபிளவரை நடுத்தரத்துண்டுகாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, காய் மூழ்கும் வரை தண்ணீர் சேர்க்கவும். சிறிது உப்புப் போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நீரை வடித்து விட்டு காலிஃபிளவர் துண்டுகளை வாயகன்ற பாத்திரத்தில் போடவும்.
அதில் இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, மைதா, அரிசிமாவு, சோளமாவு சேர்த்து நன்றாக பிசறி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்து, பிசறி வைத்துள்ள காலிஃபிளவர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...