தேவையானப் பொருட்கள்:
கொண்டைக்கடலை - 1 கப்
கீரைக்கட்டு - 1 நடுத்தர அளவு (எந்தக் கீரையையும் உபயோகப்படுத்தலாம்)
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 4
செய்முறை:
கொண்டைக்கடலையை முதல் நாள் காலையில் ஊறவைத்து, மாலையில் ஊறிய கடலையை ஒரு சுத்தமான துணியில் கொட்டி முடிந்து கொடியில் தொங்க விடவும். மறுநாள் காலையில் பார்த்தால் கடலை முளை விட்டிருக்கும். அல்லது, கடைகளிலிருந்தும் முளைக்கட்டிய கடலையை வாங்கி உபயோகிக்கலாம்.
கீரையை நன்கு ஆய்ந்து அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு, உளுந்து தாளித்து, மிளகாயைக் கிள்ளிப் போட்டு சிவக்க வறுத்து, அதில் கடலைப் போட்டு, உப்பு சேர்த்து ஒரு கை நீர்த்தெளித்து மூடி வேகவிடவும். கடலை வெந்தவுடன் கீரையைப் போட்டுக் கிளறி சிறு தீயில் மீண்டும் 3 அல்லது 4 நிமிடங்கள் வேகவிடவும். கடைசியில் தேங்காய்த்துருவலைத் தூவி இறக்கி வைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக