• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

தேங்காய்த்தோசை


தேவையானப்பொருட்கள்:

புழுங்கலரிசி - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 4 அல்லது 5 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை 5 அல்லது 6 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். மாவை மிக்ஸியிலிருந்து எடுக்கும் முன் அதில் தேங்காய்த்துருவலைப் போட்டு, இரண்டு சுற்று ஓடவிட்டு வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து, மாவை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் போட்டு சூடானதும், எண்ணையை தடவி விடவும். ஒரு பெரிய கரண்டி மாவை எடுத்து, தோசைக்கல்லின் விளிம்பிலிருந்து ஆரம்பித்து, வட்டமாக ஊற்றி நடுவில் முடிக்கவும். (ரவா தோசை செய்வது போல்). தோசையைச் சுற்றி ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு மறு புறமும் வேக விட்டு எடுக்கவும்.

காரமான் சட்னியுடன் பரிமாற சுவையாயிருக்கும்.

2 கருத்துகள்:

manjoorraja சொன்னது…

உளுந்து போடாத மாவா?

பெயரில்லா சொன்னது…

ஆம். இதற்கு உளுந்துத் தேவையில்லை. புளிக்க வைக்கவும் வேண்டாம். அரைத்தவுடன் தோசை ஊற்றலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...