• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

நாவல் பழம்


நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.

நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

இது ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரைக் கிடைக்கும்.

இதைச் சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். இதன் துவர்ப்பு ருசியும், இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் நாவில் படிந்துவிடும் நீல நிறமும் காரணங்களாக இருக்கலாம்.

வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது.

தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்.

7 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

இந்த படம் போதும் என் மனைவிக்கு,அவ்வளவு ஆசை அதன் மீது.

துளசி கோபால் சொன்னது…

சூப்பர் படம்.

நாக்கே நீலமா இருக்கு:-)))))

லேசா உப்புத்தூள் தூவிக்கணும்.

பூனாவில் ஜம்போ சைஸில் ஜாமூன் அட்டகாசமா இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

உண்மை. பூனாவில் பெரிய அளவு நாவல் பழம் கிடைப்பது மட்டுமல்ல. அங்கே உள்ள "ஸ்ரீ ஜீ" என்னும் கடையில் நாவல் பழ ஐஸ்கிரீம் கூட கிடைக்கிறது.

bala சொன்னது…

can someone please let me know whats it called in english.

கமலா சொன்னது…

Jamun fruit, Java Plum, Black Plum, Jambul and Indian blackberry

SUBBU சொன்னது…

//பள்ளிக்கூடங்களுக்கருகில் விற்கப்படும்//

ஆமாங்க ஆமாம், எங்க பாட்டி வீடுல இருந்தது, ஆனா அவங்க இறந்ததுக்கு அப்பறம் அதுவும் போய்டுச்சி :((((((((((((((((

கமலா சொன்னது…

வாருங்கள் சுப்பு அவர்களே. நாவல், இலந்தை, நெல்லி போன்றவை எல்லாம் இப்பொழுது தெருமுனையிலும், பள்ளிக்கருகிலும்தான் கிடைக்கிறது. ஆனாலும் இன்னமும் பாட்டி வீட்டு நினைவு வந்தால் கூடவே இவைகளும் வரும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...