• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பிரட் உப்புமா


பிரட் காய்ந்து போய்விட்டாலோ, அல்லது பிரட், பட்டர், ஜாம் என்று சாப்பிட்டு அலுத்து போய்விட்டாலோ, சுலபமான இந்த உப்புமாவை செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

தேவையானப்பொருட்கள்:

ரொட்டித்துண்டுகள் - 8
பெரிய தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணை - 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ரொட்டித்துண்டுகளின் ஓரத்திலுள்ள பிரவுன் பகுதியை நீக்கிவிட்டு, சிறு சதுரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியப்பின், தக்காளித்துண்டுகளைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும். அத்துடன் ரொட்டித்துண்டுகளைச் சேர்த்து இலேசாகக் கிளறி விடவும். பின் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்புச் சேர்த்து, ஒரு கை தண்ணீரைத் தெளித்து எல்லாவற்றையும் நன்றாகக் கிளறி விடவும். மூடி போட்டு, சிறு தீயில் வைத்து அவ்வப்பொழுது கிளறி விட்டு, பத்து நிமிடங்கள் கழித்து, கீழே இறக்கி வைத்து, எலுமிச்சம் பழச்சாறைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

1 கருத்து:

Medical Transcriptions சொன்னது…

hello Ms. Kamala

thanks for your yummy receipes.now a days we are following only your food styles. its too good and children like your badam halwa receipe and apple halwa.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...