- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
புதினா சட்னி
தேவையானப்பொருட்கள்:
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
புதினா - 1 கப்
பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
பெருங்காயம் - ஒரு பட்டாணியளவு (கெட்டிப் பெருங்காயம் இல்லையென்றால் பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்)
உப்பு - 1/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் பெருங்காயம், பருப்பு ஆகியவற்றை போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பச்சை மிளகாயின் நிறம் சற்று மாறியவுடன், புதினாவைச் சேர்த்து ஒரு நிமிடம் வத்க்கவும். பின்னர் அதில் புளி, தேங்காய்த்துருவல் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக மீண்டும் ஓரிரு வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும்.
சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
வணக்கம்,
உங்கள் தளம் அருமையாக உள்ளது.எளிமையாக,தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
அன்புடன்
மலர்
Thanks for Puthina Chatni.
nagu
www.tngovernmentjobs.in
நல்ல செய்முறை
அதில் சறிதளவு கசப்பு தன்மை வருகிறது.அடே தவிர்பது எப்படி.
புதினா சரியாக வதங்கவில்லையென்றால், சில சமயம் கசப்பு ஏற்படும். பச்சை மிளகாய், புளியை சிறிது கூட்டி அரைத்தால் கசப்பு தெரியாது.
கருத்துரையிடுக