- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
தேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
பச்சை பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 2 அல்லது 3
பூண்டுப்பற்கள் - 2
இஞ்சி - 1" துண்டு
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
தாளிக்க:
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 2
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பட்டாணியையும் வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய்த்துருவல், கசகசா, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைத்தெடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றைப் போடவும். சோம்பு சற்று சிவந்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வத்ங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து அத்துடன் உப்பு மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக மசிந்தவுடன் சாம்பாரி பொடியைச் சேர்த்து கிளறவும். பின்னர் அதில் உருளைக் கிழங்கு, பட்டாணியைச் சேர்த்து கிளறி விடவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து பிரட்டி விடவும். பின்னர் அதில் கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்க்கவும். நன்றாக கிளறி விட்டு, மூடி வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன், இறக்கி வைத்து எலுமிச்சை சாற்றை சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி விடவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
very nice kurma!
vary vary super ma
கருத்துரையிடுக