- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
உருளைக்கிழங்கு ஜாமூன்
தேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு (பெரிய அளவு) - 1
கோவா - 2 டேபிள்ஸ்பூன்
கோதுமைமாவு - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
நெய் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
சர்க்கரை - 1 கப்
பொடித்த சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலுரித்து, மசித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு அதில் கோதுமை மாவைப் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, வறுத்த கோதுமை மாவு, கோவா, பொடித்த சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த மாவை நீள வடிவத்தில் சிறு உருண்டகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து மேலும் சில் நிமிடங்கள் கொதிக்க் விட்டு, ஏலக்காய்த்தூளைத் தூவி இறக்கி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை (4 அல்லது 5) போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாகப் பொரித்தெடுத்து சர்க்கரை பாகில் போட்டு, குறைந்தது அரை மணி நேரம் ஊறியபின் எடுத்து பரிமாறவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
kathari mangai vandaikkai sudai vartral saivatharkana saimurai sollaum
கருத்துரையிடுக