• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பெங்களூர் கத்திரிக்காய் மிளகு கூட்டு


தேவையானப்பொருட்கள்:

பெங்களூர் கத்திரிக்காய் - 1
பயத்தம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

பெங்களூர் கத்திரிக்காயை, தோலை சீவி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பயத்தம் பருப்பையும், சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து குக்கரில் போட்டு, ஒரு கப் தண்ணீரை விட்டு, 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் மிளகாய், தனியா, மிளகு, சீரகம், உளுத்தம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை வறுத்தெடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மீதி எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வத்ங்கியவுடன், வேக வைத்துள்ள காயையும், பருப்பையும் மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி விடவும். நன்றாகக் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, பின்னர் இறக்கி வைக்கவும்.

13 கருத்துகள்:

"உழவன்" "Uzhavan" சொன்னது…

இதுக்காக பெங்களூர் போயி எங்களால கத்தரிக்காய் வாங்க முடியுமா? :-)

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நல்லா இருக்கும் போல இருக்கே...

கமலா சொன்னது…

ஆஹா...சீமைக்கத்திரிக்காய் என்று எழுதலாம் என்றுதான் நினைத்தேன். எந்த சீமைக்கு என்றால் என்ன செய்வது என்று பெங்களூரைப் போட்டேன். அதுவும் தவறாகி விட்டதோ. சௌ சௌ கூட்டு என்று போட்டிருக்கலாமோ. வருகைக்கு நன்றி உழவன் அவர்களே.

வருகைக்கு நன்றி "குறை ஒன்றும் இல்லை" அவர்களே. சுவையாகவே இருக்கும். அதுவும் சூடான சாதத்தில் போட்டு பிசைந்து, வததல், வடவம் பொரித்துத் தொட்டுக் கொண்டால்....

"உழவன்" "Uzhavan" சொன்னது…

//அதுவும் சூடான சாதத்தில் போட்டு பிசைந்து, வததல், வடவம் பொரித்துத் தொட்டுக் கொண்டால்.... //

அடடா.. இப்பவே நாக்குல எச்சில் ஊறுதே.. எந்த ஊருங்க உங்களூக்கு? முடிந்தா எனக்கு கொரியர் பண்ணி வையுங்களேன்.. சாப்பிடனும் போல இருக்கு :-)

கமலா சொன்னது…

உள்ளூருதாங்க. வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட வாங்க. பாஸ்தா, நூடுல்ஸ் யுகத்தில் தங்களைப் போன்றோரின் ஊக்குவிப்புதான் என் சமையல் தளத்தின் அச்சாணி. நன்றி.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

//வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட வாங்க//
ஓ..சென்னைல தான் இருக்கீங்களா.. மகிழ்ச்சி.
அதென்ன வாய்ப்பு கிடைத்தால்???? சோறு எங்கயாவது போடுறாங்கன்னா வாய்ப்பு கிடைக்காட்டாலும், ஏற்படுத்திக்கிட்டு தலை வாழை இலையோட வந்திருவோம் :-))

Vani சொன்னது…

அன்புள்ள கமலா அம்மா,

இன்று உங்க சௌ சௌ மிளகு கூட்டு செய்தேன். சுவை அபாரமாக இருந்தது.

கமலா சொன்னது…

வாணி அவர்களே. வருகைக்கு மிக்க நன்றி. இந்தக் கூட்டின் சுவை தங்களுக்குப் பிடித்தில் மிக்க மகிழ்ச்சி. மிளகு சேர்ப்பதால் சுவை கூடுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்கும் பயனளிக்கக் கூடியது.

பெயரில்லா சொன்னது…

hi Amma enakku oru santheham jeeraham enpathum taniya enpathum werupatta seeds ?

கமலா சொன்னது…

ஆமாம். இரண்டும் வெவ்வேறு விதைகள். சீரகம் என்பது ஆங்கிலத்தில் "Cumin" என்றும், தனியா என்பது "Coriander seeds" என்றும் அழைக்கப்படும். தனியாவை "கொத்துமல்லி விதை" என்றும் சொல்வார்கள்.

பெயரில்லா சொன்னது…

Amma
I tried this rec. it was superb.thank u for your wonderful rec.

வல்லிசிம்ஹன் சொன்னது…

Dear Kamala, whatever you call this vegetable, the final product is so nice.

thank you so much for sharing this receipe.

I love chow chow.:0)

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி வல்லிசிம்ஹன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...