• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

அன்னாசிப்பழ பொங்கல்


தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பால் - 2 கப்
தண்ணீர் - 1 கப்
சர்க்கரை - ஒன்று முதல் ஒன்றரைக் கப் வரை
அன்னாசிப்பழத்துண்டுகள் - 1 கப்
அன்னாசிப்பழ சிரப் - 1 டேபிள்ஸ்பூன்
பால் கிரீம் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய பிஸ்தா - 2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியைக் கழுவி, அத்துடன் 2 கப் பால், 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக விடவும்.

குக்கர் ஆறியபின், குக்கரைத் திறந்து நன்றாக மசித்து விட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி அதில் சர்க்கரைச் சேர்க்கவும். விடாமல் கிளறி விட்டு, சர்க்கரைக் கரைந்து, சாதத்துடன் கலந்தபின், அன்னாசிப்பழத்துண்டுகள், அன்னாசி சிரப் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அத்துடன் பால் கிரீமைச் சேர்த்து, மிதமான தீயில், கெட்டியாகும் வரை வைத்துக் கிளறவும். கீழே இறக்கி வைத்து பிஸ்தா துண்டுகளைத் தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு:

முழு அன்னாசிப்பழம் கிடைக்கவில்லையென்றால், டின்னில் அடைத்து விற்கப்படும் அன்னாசிப்பழத்தை வாங்கி உபயோகிக்கலாம். பால் கிரீமிற்குப் பதில், திக்கான தேங்காய்ப்பாலையும் உபயோகப் படுத்தலாம்.

ஒரு சொட்டு மஞ்சள் கலரும், விருப்பப்பட்டால் சேர்க்கலாம். பொங்கல் பார்க்க நன்றாயிருக்கும்.

அன்னாசிப்பழ இனிப்பிற்கேற்றாற்போல், சர்க்கரையை கூட்டியோ அல்லது குறைத்தோ சேர்க்கவும்.

3 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

அருமையான ரெசிப்பி. கமலா.
துண்டுகளாக வாங்குவதற்குப் பதில் முழு அன்னாசிப் பழமே வாங்கிடலாமே. சுத்தத்தைப் பற்றிக் கவலைப் படவேண்டாம்.
நன்றி.

Kamala சொன்னது…

வாருங்கள் வல்லிசிம்ஹன் அவர்களே. முழு பழம் நிச்சயம் சுகாதாரமானதுதான். ஆனால் ஒரு கப் பொங்கல் செய்ய முழு பழம் வாங்கி, அதை தோல் சீவி துண்டுகள் போடுவது சற்று சிரமம். பழத்துண்டுகள் மீந்தும் போகும். மேலும் சமைக்கும் முன் பொருட்களைக் கழுவி விட்டுதான் சமைப்போம். சமைக்கும் முன் எந்தப் பொருளையும் நன்றாகக் கழுவி விட்டு உபயோகப்படுத்தினால் நல்லது.

Kamala சொன்னது…

வல்லிசிம்ஹன் அவர்களே. தாங்கள் கூறியுள்ளது போல், முழுப்பழம் உபயோகிப்பது நல்லது. எனவே, என் குறிப்பையும் சற்று மாற்றி விட்டேன். கருத்திற்கு மிக்க நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...