• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கீரை வடை


தேவையானப்பொருட்கள்:

கடலைப்பருப்பு - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
மிளகு - 1 டீஸ்பூன்
முளைக்கீரை (பொடியாக நறுக்கியது) - 2 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

பருப்புகள் இரண்டையும் ஒன்றாக 4 மணி நேரம் ஊற விடவும். பின்னர் நன்றாகக் களைந்து, கழுவி, தண்ணீரை ஒட்ட வடிக்கவும். அத்துடன் மிளகாய், மிளகு, உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயத்தையும், கீரையையும் சேர்க்கவும். சோம்பை ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு, நன்றாக பிசைந்த்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து, வடையாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: எந்த வகை கீரையை உபயோகித்தும் இந்த வடையைச் செய்யலாம். தனி உளுத்தம் பருப்பிலும் மெது வடை போல் செய்யலாம். மொரமொரப்பாக வேண்டுமெனில், கடலைப் பருப்பில் செய்ய வேண்டும். இரண்டு பருப்பையும் சம அளவில் சேர்த்தும் செய்யலாம்.

3 கருத்துகள்:

Jaleela Kamal சொன்னது…

கீரை வடை பார்க்கவே ரொம்ப அருமையாக இருக்கு கமலா>

நானும் இது போல் செய்வதுண்டு.சில‌ வித்தியாச‌ம், உங்க‌ள் முறையிலும் செய்து பார்க்கிறேன்.

மேலே மிளகு , பிளகு என்று இருக்கு பாருங்கள் மாற்றி விடுங்கள்.

ers சொன்னது…

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

கமலா சொன்னது…

நன்றி ஜலீலா. எழுத்துப் பிழையை திருத்தி விட்டேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...