• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பால் தேங்காய் பர்பி


தேவையானப்பொருட்கள்:

பால் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
தேங்காய்த்துருவல் - 3 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பால், சர்க்கரை, தேங்காய்த்துருவல் அனைத்தையும் ஒரு அடி கனமான வாணலியில் போட்டு, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறவும். (15 முதல் 20 நிமிடங்களில் கெட்டியாகும்) பர்பி கெட்டியாகி உருண்டு, திரண்டு வரும் பொழுது ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கிளறவும். (விருப்பமானால் சிறிது விரும்பிய வண்ணம் மற்றும் வாசனைத் திரவியம் சேர்க்கலாம்). நெய் தடவியத் தட்டில் கொட்டி, சற்று ஆறியதும் துண்டுகள் போடவும்.


இதை மைக்ரோவேவ் அவனிலும் சுலபமாகச் செய்யலாம்.

மேற்கண்ட அளவிற்கு 10 முதல் 12 துண்டுகள் வரை கிடைக்கும்.

3 கருத்துகள்:

puduvaisiva சொன்னது…

எனக்கு பிடித்த இனிப்பு

நன்றி சகோதரி.

Kolipaiyan சொன்னது…

ஈசியா செய்து பார்க்கும் படி இருக்கு. செய்து பார்த்துவிட்டு என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

உங்களுக்கு நேரம் கிடைத்தால் இதனையும் வந்து வாசித்துவிட்டு போங்க. வாழ்த்துக்கள். http://kolipaiyan.blogspot.com/2010/03/blog-post.html

கமலா சொன்னது…

வருகைக்கு நன்றி. தங்கள் பதிவுகளைப் படித்தேன். சமையற்குறிப்புகள் சிறப்பாக உள்ளன. தங்கள் குறிப்புகள் சிலவற்றைச் செய்துப் பார்க்க வேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...